ஜப்பான் கடற்பகுதிக்குள் சீன கப்பல்கள் அத்துமீறுவது அதிகரித்துள்ள நிலையில் ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக பிலிப்பைன்ஸ் நீர்வழி பாதையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவது அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக சர்வதேச கடல்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க – சீனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் கிழக்கு சீன கடலில் ஜப்பானிய கடல்பகுதியில் அமைந்த சென்காகு தீவில் சீனாவின் 4 கப்பல்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான் கடற்படை ”உட்சுரி மற்றும் தைசோ தீவு பகுதிகளில் சீன கப்பல்கள் நுழைந்துள்ளன. அவற்றை வெளியேற சொல்லி உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறாக ஜப்பான் தீவுகளிடையே சீனா கப்பல்கள் நுழைவது இது 16வது முறை” என கூறியுள்ளது.