பாலஸ்தீனம் நாட்டிற்கு ஆதரவாளித்த பத்திரிகையாளர் ஒருவர் அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
பாலசீனத்திற்கு ஆதரவளித்து கட்டுரை எழுதியதால் அமெரிக்காவில் உள்ள தனியார் பத்திரிகையில் பணி புரிந்த ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் பாலஸ்தீனத்தை ஆதரித்து கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த கட்டுரையில் இஸ்ரேலின் ராணுவத்தால் பாலஸ்தீனத்தில் உள்ள 418 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.
இந்த கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள பலர் இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து பத்திரிகை நிர்வாகம் கட்டுரையாளரை பணி நீக்கம் செய்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கட்டுரையால் நெருக்கடிகள் வர தொடங்கியதை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.