காட்டில் சிங்கங்களால் வேட்டையாடப்பட்ட காட்டெருமை ஒன்று உயிரோடு தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில் இரண்டு ஆண் சிங்கங்களும், மூன்று பெண் சிங்கங்களும் சேர்ந்து ஒரு காட்டெருமையை வேட்டையாடி வீழ்த்துகின்றன. அப்போது அதில் இருந்த இரண்டு பெண் சிங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள தொடங்குகின்றன. அதை சமாதானம் செய்ய மற்ற சிங்கங்கள் குறுக்கே புகுந்தன. நடந்த களேபரத்தில் அவை காட்டெருமையை கவனிக்கவில்லை.
சிறிய காயங்களுடன் வீழ்ந்த அந்த காட்டெருமை மெல்ல எழுந்து சென்று தனது கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது. ஆனால் சிங்கங்களோ சண்டையிட்டவாறே எதிர் திசையில் சென்றுவிட்டன.
இதை ஷேர் செய்த பர்வீன் “இந்த சிங்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொண்டன. அவைக்கு உணவு கிடைத்தது, ஆனால் அவற்றுக்குள் ஏற்பட்ட தகராறால் உணவை தவறவிட்டுவிட்டன” என பதிவிட்டிருக்கிறார்.