மாலத்தீவு அமைச்சர்கள் மற்றும் மாலத்தீவு அதிபர் பேசிய சர்ச்சை பேச்சு காரணமாக இனி இந்தியாவில் இருந்து ஒருவர் கூட மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டார் என தெரிகிறது. இதனை அடுத்து சீனா எங்களது நெருங்கிய நட்பு நாடு என்றும் சீனாவில் உள்ள பொதுமக்கள் எங்கள் நாட்டிற்கு அதிகமாக வருகை தர வேண்டும் என்றும் மாலத்தீவு அதிபர் கோரிக்கை விட்டுள்ளார்.
பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றதை எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதால் இந்தியாவே கொதித்து எழுந்தது. இனிமேல் இந்தியர்கள் யாரும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டார்கள் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது.
இந்த நிலையில் சீனா எங்களது நெருங்கிய நட்பு நாடு என்றும் எங்களின் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்று என்று கூறிய மாலத்தீவு அதிபர் மாலத்தீவு சுற்றுலா பகுதியை பார்ப்பதற்காக சீன சுற்றுலா பயணிகள் அதிகமாக வர வேண்டும் என்றும் எங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு அதிகமாக சுற்றுலா வருவது சீனர்கள் தான் என்றும் அந்த நிலை நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியை பகைத்துக் கொண்டதால் மாலத்தீவு தற்போது பெரும் சிக்கலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது