பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கெர்பெர்க் ஹவாயை சுற்றியுள்ள தீவுகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வருகிறார்.
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கெர்பெர்க் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி திட்டங்கள் அனைத்தையும் மெடா என்ற நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார். இது மெடாவின் அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்சிகளுக்கு முதற்கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மெடா நிறுவனர் மார்க் ஸுக்கெர்பெர்க் தன் பெயரிலும், தனது மனைவி ப்ரிசில்லா பேரிலும் ஹவாய் அருகே உள்ள கௌவாய் தீவில் தொடர்ந்து நிலம் வாங்கி வருகிறார். இதுவரை ரூ.127 கோடி மதிப்புடைய நிலத்தை அவர் வாங்கியுள்ள நிலையில், ஹவாயில் அவரது நிலத்தின பரப்பளவு 1500 ஏக்கரை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.