`மக்களின் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருள் விற்பனை செய்யும் மார்டி என்ற ரோபோ அமெரிக்க நாட்டில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகிறது.
தொலைபேசியின் மூலமோ, செல்போனிலோ ஆர்டர் செய்தால் அடுத்த சில நிமிடத்தில் இப்புதிய ரோபோ மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உரிய இடத்திற்கு வந்து விற்பனை செய்யும்.
இந்த நடமாடும் மளிகைக்கடை 12 அடி நீளமும் , 6 அடி உயரமும் உள்ளது. மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் பொருட்களை எடுத்து வந்து விநியோகிக்கும்.
மின்னஞ்சலில் இதற்கான ரசீது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் மக்களுக்கான பயனுள்ள திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.