இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்.
அவர் தான் பதவியேற்கும் போதே, இங்கிலாந்து நாட்டின் பொருளாதார சிக்கல், பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் நிலையில், இதைத் தீர்க்கும் நடவடிக்கைகள் ரிஷி சுனக் ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார்.
கடந்த புதுவருடத்தில் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதில், இங்கிலாந்து நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் 18 வயது வரை கணிதம் கட்டாயம் படிப்பதற்காக திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள நிலவரப்படி, இங்கிலாந்தீல் 16 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களில் பாதி எண்ணிகையில்தான் கணிதம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.