மெக்ஸிகோவில் சாக்கடை சுத்தம் செய்யும்போது முதலை சைஸில் எலி ஒன்றை கண்டு பயந்த ஊழியர்கள் உற்று பார்த்ததும் உண்மை தெரிந்து மன அமைதி அடைந்துள்ளனர்.
மெக்ஸிகோவின் நகரமொன்றில் சாக்கடை பழுதுபட்டதால் அதை சுத்தம் செய்யும் பணியில் துப்புறவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சாக்கடை குழாயை சுத்தம் செய்யும் போது மனிதனைவிட உயரமாக இருந்த எலியை பார்த்து அலறியுள்ளனர். பிறகு கூர்ந்து கவனிக்கும்போது அது ஒரு பொம்மை என்று தெரிய வந்துள்ளது. சாக்கடையிலிருந்து அதை வெளியே எடுத்துள்ளனர்.
முன்னதாக ஹாலோவின் பண்டிகை கொண்டாடப்பட்டபோது இந்த எலி பொம்மை உருவாக்கப்பட்டிருக்கலாம். பிறகு எப்படியோ மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் அடித்து வரப்பட்டு சாக்கடை குழாயில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ராட்சத எலி பொம்மையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.