இந்தியாவில் யோகா பயிற்சி முறை தோன்றியதாக இருந்தாலும் பல நாடுகளிலும் யோகா பயிற்சி முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்குப் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி யோகாவின் சிறப்புகள் பற்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில் World Of Statistics என்ற நிறுவனம் உலகளவில் ஆண்கள் அதிகளவு யோகா பயிற்சி செய்யும் நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் 22 சதவீதம் பேரும், அமெரிக்காவில் 12 சதவீதமும் ,இங்கிலாந்தில் 9 சதவீதமும், தென் கொரியாவில் 7 சதவீதமும், ஸ்பெயினில் 7 சதவீதமும், சீனாவில், பிரான்ஸில் சதவீதமும், 4 சதவீதமும், யோகா பயிற்சி செய்வதாக கூறியுள்ளது.
அதேபோல், பெண்கள் அதிகளவு யோகா பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 43சதவீதத்துடன் முதலிடத்திலும், 31 சதவீதத்துடன் இந்தியா மற்றும் ஸ்பெயின் 2 வது இடமும் பிடித்துள்ளன.