உலத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
நாசா பெரிய தொலைநோக்கி ஒன்ரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கு வைட் பீல்ட் இன்ஃப்ராரெட் சர்வே டெலிஸ்கோப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் உலகத்தை புதிய தோற்றத்தில் பார்க்க முடியும் என்றும், இந்த தொலைநோக்கி கேமரா போலவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டார்க் எனரி குறித்து ஆராயவும், உலகில் இருக்கும் அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் இந்த தொலைநோக்கி முடிவுக்கு கொண்டுவரும் வர வாய்ப்புள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. ஒரு சிறிய தொலைநோக்கி அனுப்பும் 10 புகைப்படத்திற்கு சமமாக இந்த பெரிய தொலைநோக்கி ஒரு புகைப்படத்தை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நாசா வரலாற்றில் மிகவும் பெரிய திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை நாசா விண்வெளி துறையில் செலவு செய்ததை விட இந்த தொலைநோக்கிக்கு அதிக செலவு செய்துள்ளது. மேலும், இந்த திட்டம் நிறைவடைய எப்படியும் 2020 ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.