இந்தியாவில் பழங்காலம் முதலே வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
அதிலும் கிராமங்களில் உள்ள மக்கள் தினமும் வேப்பங்குச்சியில் பல் துலக்கி பல் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது இலவசமாகக் கிடைக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் அந்நாட்டில் வேப்பங்குச்சியை ரூ.1800க்கு விற்பனை செய்துள்ளது.
அதேபோல், சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டில் ஒன்று நியூசிலாந்து நிறுவனம் ரூ.41000 க்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.