உடற் கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தற்போது.
மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு' (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது.
ஆனால், லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனி உறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும்.
இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.