கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டி படைத்து வரும் நிலையில் இன்னும் அமெரிக்கா இந்தியா பிரேசில் உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இந்த நிலையில் உலகின் முதல் கொரோனா இல்லாத நாடு என நியூசிலாந்து நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நாடாக அதிகாரபூர்வமாக நியூசிலாந்து நாட்டில் அறிவித்ததை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப் படவில்லை என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட சிகிச்சை பெற்று வரவில்லை என்பதால் கொரோனா நோய் இல்லாத நாடு என நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது
மேலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடாக நியூசிலாந்து அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது