செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் செல்போன் பயன்பாட்டுக்கும் மூளை புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆய்வு முடிவு வெளியாகி உள்ளதை அடுத்து செல்போன் பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செல்போனை அதிகம் பயன்படுத்தினால் கண், மூளை உள்பட பல உறுப்புகள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்துவது அவசியம் என்று உலக சுகா சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ஆதரவில் நடந்த ஆய்வு ஒன்றின் முடிவில் செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தமில்லை என்று கூறப்பட்டுள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பாதிப்புகள் இருக்கும் என்றாலும் அவை மூளை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி அவர்களுக்கு எந்தவிதமான மூளை புற்றுநோய் பாதிப்பும் வரவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே செல்போனை அதிகம் பயன்படுத்தும் நபர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Edited by Siva