குப்பைகள் நிரப்பிய பலூனை வடகொரியா தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பலூன் தென்கொரிய அதிபர் மாளிகையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தென்கொரியாவுக்குள் குப்பைகள் நிரப்பப்பட்ட பலூனை வடகொரியா ஏவியதாகவும், இந்த பலூன் தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்றும், குப்பைகள் அதிபர் மாளிகையில் விழுந்த போது அதிபர் அந்த வளாகத்தில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. வடகொரியா GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலூன்களை தென்கொரியாவில் உள்ள சில முக்கிய இடங்களில் துள்ளியமாக இறக்கி வருவதாகவும், வேண்டுமென்றே தென்கொரியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை வடகொரியா செய்து வருவதாகவும் குற்றம் காட்டப்பட்டுள்ளது.