பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்து இந்திய விமானங்கள் பயந்து ஓடியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கிண்டலடித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2000 வீரர்கள் அதிரடியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும், இந்த தாக்குதலில் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாகவும் பலர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் ஒரு ஆரம்பமே என்றும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்களை அழிக்கும் தாக்குதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர் உள்ளிட்ட பலர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் விமானங்கள் பயந்து ஓடியது என தகவல் வெளியானது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டது. உடனடியாக பாகிஸ்தான் விமானப் படை பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானங்கள் பயந்து திரும்பிச் சென்றன. இந்த தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இல்லை என கூறியிருக்கிறார்.