டைஃபாய்டு காய்ச்சலை எதிர்க்கும் புதிய மருந்தை உலக நாடுகளிலேயே பாகிஸ்தான் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளது.
Super bug எனப்படும் டைஃபாய்டு வைரஸ் கிருமியால், பாகிஸ்தானில் கிட்டதட்ட 11,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வைரஸ் நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்களும் உயிரிழப்பவர்களும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.
இந்நிலையில் இந்த டைஃபாய்டு காய்ச்சலை எதிர்க்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்றை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது. இதனை உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது.
இது குறித்து சிந்து மாகாண சுகாதார அமைச்சர் மிர்ஸா “9 மாத காலத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசியை போட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகிலேயே டைஃபாய்டுக்கு தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.