Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இம்ரான்கான் பிரதமராவதில் சிக்கல்: எதிர்கட்சிகளால் திடீர் குழப்பம்!

இம்ரான்கான் பிரதமராவதில் சிக்கல்: எதிர்கட்சிகளால் திடீர் குழப்பம்!
, திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (15:44 IST)
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
 
ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் சார்பில் பிரதமரை தேர்ந்தெடுக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ராணுவத்தின் பலத்தால் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொம்மை அரசாங்கம் அமைவதை கடுமையாக எதிர்க்கிறோம்.  இதை கண்டித்து போராடுவோம் என எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்தத்தில் குறைந்த தட்டணுக்கள் : தீவிர சிகிச்சையில் கருணாநிதி : மருத்துவமனை அப்டேட்