வேலைச்சுமை காரணமாக மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ரோபோ ஒன்று வேலைச்சுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.
கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நைட்ஸ்கோப் K5 (Knighscope K5) என்ற ரோபோவை தயாரித்தது. இந்த ரோபோ வாஷிங்கடன் நகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் செக்யூரிட்யாக இருந்து வந்தது.
இதன் வேலை, பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள், வாகன் ஓட்டிகள் ஆகியவற்றை கண்கானிப்பதாகும். 136 கிலோ எடை, 5 அடி உயரம் உள்ள இந்த ரோபோ மணிக்கு 3 மைல் வேகத்தில் நடக்கும்.
இந்த ரோபோவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை பணியில் இருக்கும் போது அருகில் இந்த ஃபவுண்ட்டைன் ஒன்றை நோக்கிச் சென்று அதில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.
ரோபோவின் தற்கொலைக்கு என்ன காரன்ம் என்று இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதர்களுக்குதான் கஷ்டம் இருக்கும் என்று நினைத்தால் ரோபோக்களின் நிலமையும் நம்மை போன்றுதான் உள்ளது.