பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஜனதா தள கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில், பீகார் மாநிலக் கல்வித்துறை அமைச்சரான சந்திரசேகர், ராமாயண கதையைக் கூறும் ராமசரிதமானஸ் என்ற நூலைப் பற்றி பேசினார்..
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நூலைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ள அமைச்சர் சந்திரசேகரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று மடாதிபதிகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்,கல்வித்துறை அமைச்சரின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அயோத்தி மடாதிபதி ஜெகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஜனதா கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.