சிங்கப்பூரில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் சென்ற பெண்ணை உடனடியாக போலீஸார் கைது செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை கட்டாயமாக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாவிட்டால் சிறை தண்டனை அளிக்கப்படும் என கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக உடனடியாக அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.