இலங்கையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வெடித்தது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும், 10 நாட்களுக்கு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தினர். இருப்பினும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது.
இதனால், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மொபைல் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.