சீனா, இத்தாலியை முந்தியது ஸ்பெயின்
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஆரம்பித்து அதன்பின்னர் அந்நாடு முழுவதும் பரவினாலும் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனாவால் 3,281 பேர் பலியாகி உள்ள நிலையில் கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 47,610 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று மட்டும் ஸ்பெயினில் 5552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்
இத்தாலியில் தான் சீனாவைவிட கொரோனா மிக வேகமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீனா, இத்தாலியை விட ஸ்பெயினில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயினில் இன்று மட்டும் கொரோனாவால் 443 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் சீனாவில் இன்று 47 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.