ஜெர்மணி நாட்டில் ஒருநபர் அணில் குட்டி துரத்தியதற்கு பயந்து காவல்துறையினருக்கு போன் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெர்மனியில் கார்ல்ஸ்ருஹே என்ற நகரில் காவல்துறையினருக்கு போன் செய்த பேசிய நபர், தன்னை அணில் குட்டி ஒன்று துரத்துவதாகவும் உடனே வந்து காப்பாற்றுமாறும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இளைஞர் ஒருவரை அணில் குட்டி ஒன்று துரத்துவதை கண்டனர். சிறிது நேரத்தில் அந்த அணில் குட்டி, சோர்வடைந்து துரத்துவதை விட்டுவிட்டது.
அந்த அணில் குட்டியை காவல் துறையினர் மீட்டு அதற்கு கார்ல் என பெயரிட்டுள்ளனர். தற்போது, அது விலங்கள் பாதுகாப்பு மையம் ஒன்றில் பாதுகாப்பாக வைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமன்றி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.