இந்திய சுதந்திர விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளாத நிலையில் புதிய நாடு ஒன்றின் அதிபர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் 26ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர விழாவில் கலந்து கொள்ள முன்னதாகவே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் அதை ஏற்றுக் கொண்டும் இருந்தார். ஆனால் தற்போது இங்கிலாந்தில் வீரியமிக்க கொரோனா வலுவடைந்து வருவதையடுத்து தனது இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அதிபர் இந்த முறை இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் இருக்கும் குட்டி நாடு சுரினாம். இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் சந்த்ரிகா பெர்சாத் சந்தோஹி. இவர்தான் இந்த முறை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தோஹி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுரினாம் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.