அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யார்? பின்னணியில் ஒபாமா!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகிய இரண்டு பதவிகளை அடுத்து முக்கியமான பதவி என்பது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தான்
உலகமே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் யார் என்ற கேள்வியுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக சூசன் ரைஸ் என்பவரை நியமனம் செய்ய வேண்டும் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது
ஒபாமா அதிபராக இருந்தபோது சூசன் ரைஸ் என்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தார் என்றும் அவருடைய பணி மிக சிறப்பாக இருந்ததால் அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக அமைச்சராக வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக கூறப்படுகிறது
மேலும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் மற்றும் சூசன் ரைஸ் ஆகிய இருவருமே தேர்வு செய்யப்பட்டனர் எனவும் கடைசி நேரத்தில் கமலா ஹாரீஸ் முந்திவிட்டார் என்றும் கூறப்படுகிறது அதனால் சூசன் ரைஸ்க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள பதவியான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக ஒபாமா வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது