சிரியா அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் மேலும் போர் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்தனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது. இந்த போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு, ராணுவ தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் காரணமாக 900 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஐநா அமைப்பு சிரிய அரசு படைகளுக்கும், கிளிர்ச்சியாளர்களுக்கும் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதையும் மீறி தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில், சிரியா அதிபர் பின்வருமாறு ஊடங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சமாதானம் மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை உடன்பாடு இல்லை. கிளர்ச்சியாளர்கள் படையை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.