ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களிடமுள்ள ஆயுதங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆப்கன் ராணுவத்தை வீழ்த்தி தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். தலீபான்கள் நாட்டை பிடித்த நிலையில் சீனா, ரஷ்யா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் தலீபான்கள் தலைமையிலான ஆப்கன் ஆட்சிக்கு பரிந்துரைப்பது குறித்து உலக நாடுகள், ஐ.நா சபை தீவிர ஆலோசனையில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் தங்களிடம் உள்ள ஆயுத இருப்பை காட்டும் வகையில் தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் சாரை சாரையாக துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதோடு, பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள், பஸூக்கா போன்ற ராக்கெட் லாஞ்சர்களையும் வைத்துள்ளனர். இவ்வளவு ஆயுதங்கள் தலீபான்களிடம் இருப்பது அண்டை நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.