Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரு டீ மாஸ்டர் மாடல் ஆன கதை....

ஒரு டீ மாஸ்டர் மாடல் ஆன கதை....

ஒரு டீ மாஸ்டர் மாடல் ஆன கதை....
, புதன், 19 அக்டோபர் 2016 (16:08 IST)
பாகிஸ்தானில் ஒரு டீக்கடையில் டீ போடும் ஒரு நபர், அவரின் கண்கள் மூலம் பிரபலமாகி தற்போது மாடலாகவும் மாற உள்ளார். 


 

 
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அர்ஷத் கான்(18). இவர் கடை வீதியில் இருந்த ஒரு டீக்கடையில் டீ போடும் வேலை பார்த்து வரும் அவர், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் சமூக வலைத்தளளில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
 
இவரின் கடைக்கு வந்த ஒரு பெண் போட்டோ கிராபர் ஜியா அலி, இவரின் நீல நிற கண்களால் கவரப்பட்டு, அவரை புகைப்படம் எடுத்தர். அப்புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கதிலும் பதிவிட்டார். அவ்வளவுதான். அவரின் புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி, டிரெண்டிங்கில் முதலில் இருந்தார் அர்ஷத் கான். 

webdunia

 

 
அவரின் புகைப்படத்தை பார்த்த பலர், இவரை யாரேனும் மாடலிங் துறைக்கு அழைத்து செல்லுங்கள். அதன் மூலம் அவர் வாழ்க்கை மாறலாம் என்று கருத்து தெரிவித்தனர். அதைக் கண்ட ஒரு இஸ்லாமாபாத் கம்பெனி, இவரை மாடலாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஆனால், சினிமாவில் நடிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 
தினமும் 40-50 பெண்கள் அவரின் கடைக்கு வந்து, அவருடன் செல்பி எடுத்து செல்கிறார்களாம். இதனால் வெட்கப்படும் அர்ஷத், தன் வேலைக்கு வேட்டு வைத்து விடாதீர்கள் என்று கூறி வருகிறாராம்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ளிக்கா இப்படி நடந்தது அசிங்கம்! சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்கு: டெல்லி கமிஷனரிடம் மனு