பசிபிக் பெருங்கடல் தீவு நாடாகவுள்ள பப்புவா நியூகினியாவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில், நேற்று நில நடுக்கலம் ஏற்பட்டது. இதில், அப்பகுதிகளில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் விழுந்தன.
இந்த நிலநடுக்கம் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 300 மைல்க்கும் அதிகமான தூரம் நில நடுக்கத்தின் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியானதாகவும், இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த நாட்டில் பிரதமர் ஜேம்ஸ் மராப் இது பெரிய நில நடுக்கம் என்று தெரிவித்துள்ளார்..
சமீபத்தில் சீனாவில் பயங்கர நில நடுக்கம் வந்து பலரை உயிர் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.