Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தாய்லாந்து பிரதமர் இடை நீக்கம் - அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி!

prayut
, புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:16 IST)
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஓச்சாவை அந்த நாட்டு அரசியல் அமைப்பு நீதிமன்றம் இடை நீக்கம் செய்து  உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து  நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியைக் கவிழ்ந்த பிரயுத் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முறைப்படி பிரதமர் ஆனார்.

 பிரதமர் பதவிக்கான வரம்பு 8 ஆண்டுகள் என்ற நிலையில் அந்தச் சட்டத்தை பிரயுத் மீறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அதாவது, அவர் முதலில் பதவியெற்றது 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்பதால்,  நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஆனால், பிரயுத் ஆதரவாளார்கள் 2017ஆம் ஆண்டு கால வரம்பு விதி கொண்டுவரப்பட்டதால் அதிலிருந்து கணக்கிட வேண்டும் என்றனர்.

 இந்த நிலையில், இதுகுறித்து வழக்கு அரசியலைப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்ல், பிரயுத்தை இடை  நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும், பிரயுத் தன் வாதத்தை புகார் நகலை பெற்ற அடுத்த 15 நாட்களில் சமர்ப்பிக்க   வேண்டுமெனக் கூறியுள்ளது.  இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதமாதா கோவில் பூட்டை உடைத்த வழக்கு; பாஜகவின் ராமலிங்கத்திற்கு ஜாமின்!