உலகில் 7 கண்ட பரப்புகள் உள்ள நிலையில் பல ஆண்டுகளாக மறைந்திருந்த 8வது கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என மொத்தம் 7 நிலப்பரப்புகள் உள்ளன. இதில் அண்டார்டிகா தவிர மற்ற அனைத்தும் மனிதர்கள் வாழும் கண்ட பகுதிகள் ஆகும். இதுதவிர 8வதாக ஒரு கண்ட பரப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு அருகே சுமார் 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Zealandia என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டம் மடகாஸ்கர் தீவை விட பெரியது என்றும், சுமார் 375 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கண்டம் கடலில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் இது 8வது கண்டமாக அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.