Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யுசகு மேஸ்வா’ விண்வெளி சுற்றுலாவுக்கு செல்லும் முதல் பயணியாக அறிவிப்பு

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யுசகு மேஸ்வா’ விண்வெளி சுற்றுலாவுக்கு  செல்லும் முதல் பயணியாக அறிவிப்பு
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:01 IST)
அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது இன்று நேரலையாக ஒளிபரப்பானது.அப்போது அதன் தலைவரான எலான் மசுக் இது குறித்த தகவலை தெரிவித்தார்.

அதன்படி அமெரிக்காவில் வசித்து வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுசகு மேஸ்வா இந்த அற்புதமான வாய்ப்பைப் பெறும் முதல் மனிதர் ஆவார்.கலைகளில் பெறும் ஆர்வம் கொண்டவரான இவர் ஸோஸோ எனும் ஆடை நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

இது குறித்து ஸோஸோ கூறும் போது, விண்வெளி சுற்றுலா பயணத்திற்கு உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்களை என்னுடன் அழைத்துச் செல்ல இருக்கிறேன். அதற்கான பணிகளை ‘டியர் மூன்’ என்ற பெயரில் தொடங்க உள்ளதாக அவர்  தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - வீடியோ