அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரப்புரையில் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்ட நிலையில், துப்பாக்கியுடன் அந்த கூட்டத்திற்கு ஒரு நபர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டொனால்டும் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மாதம் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் துப்பாக்கி தோட்டா காதை உரசி சென்றதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்நிலையில் நேற்று கலிபொர்னியா மாகாணம் கொசேல்லாவில் ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரச்சாரத்திற்கு தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் வந்ததாக தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்ததாக ரிவர்சைட் கவுண்டி ஷெரீப் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை உயிர்தப்பிட ட்ரம்ப் நடத்திய பிரச்சாரத்தில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கியுடன் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K