ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போரில், உயிரிழந்ததாக கருதப்பட்ட ரஷ்ய போர் விமான பைலட் தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார்.
1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே நடந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் ரஷ்ய போர் விமான பைலட் செர்ஜி பேன்டலிக்கின், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார் செர்ஜி பேன்டலிக்கின். இது அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்ஜியை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.