அதிபர் டொனால்ட் டிரம்பை பார்க்க, துருக்கி அதிபர் எர்டகன் அமெரிக்கா சென்றுள்ளார். இருநாட்டு அதிபர்களுக்கு இடையேயான சந்திப்பு வெள்ளைமாளிகையில் நடைபெற்றது.
இதில், இரு நாட்டு உறவுகள், பரஸ்பர புரிதல் மற்றும் சிரியா நாட்டு விவகாரம், அங்கி நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக இருநாட்டு அதிபர்களும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈராக்கில் ஒரு போராட்டக்காரர்...போலீசாருக்கு எதிராக ஒரு சிங்கம்! என பதிவிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் சிரியா காவலர் ஒருவர், நாய்க்கு பதிலாக, ஒரு சிங்கத்தைக் கட்டில் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் போலீஸ்காரர் எதற்காக சிங்கத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு போனார் என்று தெரியவில்லை.