தெற்கு அர்ஜெண்டினாவில் படகோனியாவில் சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அப்போதைய காலக் கட்டங்களில் வாழ்ந்த டைனோசர்களில் இதுதான் கடைசி இனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டைனோசர்கள் 32 அடி உயரம் வரை வளர்ந்திருக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இவை மெலிதான உடலமைப்பும், நீண்ட வால்களும்,40செமீ நீளம் கொண்ட கட்டைவிரல்கள் கொண்டவையாக இருந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.