புயல்,சுனாமி, இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் கடல் வாழ் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கம்.
இதுபோல இந்தோனேஷியாவில் நடந்துள்ளது. இந்நாட்டிலுள்ள ஜகர்த்தா பகுதியில் இறந்த நிலையில் ஒரு திமிங்கலம் கரை ஒதுங்கியது.
இந்நிலையில் இறந்துபோன திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் நெகிழி சாக்குகள் போன்றவை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனால் இந்தோனேஷிய கடல் பகுதியில் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் சீனாவிற்கு பிறகு மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை இந்தோனேஷியா கடலில் கலப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கடைசியில் கடலில் கலந்து திமிங்கலம் மற்றும் மீன்,போன்ற கடல்சார் உயிரினங்களை அழிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.