மேற்கத்திய நாடான ஸ்பெயினில் உள்ள ஆரகான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற பண்ணையில் அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சகத்துறை தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள விலங்குகளில் மிங்க் விலங்குகளின் ரோமங்காளான பொருட்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக அளவில் ஏழாவது மிங்க் ரோம உற்பத்தில் பங்கு வகிக்கும் ஸ்பெயின் நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக அங்குள்ள பண்ணைகளில் ஒருலட்சம் மிங் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிறது.