டிக்டாக் நிறுவனத்தின் தலைமை இடத்தை லண்டனுக்கு மாற்ற பணிகள் நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம் தனது தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றி விடலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
தற்போதைய தகவலின் படி சீனாவின் பைட் டான்ஸ் டெக்னலஜி நிறுவனத்தில் இருந்து டிக்டாக் வெளியேறி அமெரிக்க நிறுவனமாக செயல்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என வெள்ளை மாளிகை தரப்பில் தகவல் வெளியானது.
அதற்கேற்ப நிறுவனத்தின் தலைமை இடத்தை லண்டனுக்கு மாற்ற பணிகள் நடந்து வருகிறது. சீன ஆப் என்பதால் இந்த நெருக்கடிகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த டிக்டாக் நிறுவனம் தலைமை அலுவலகத்தை லண்டனுக்கு மாற்றினால் அமெரிக்காவும் தடை விதிக்காது, இந்தியாவும் தடை குறித்து பரிசீலிக்கும் என நம்புகிறது.