கடந்த 1915 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு புறப்பட்ட டைட்டானிக் கப்பல் பனிமலையில் மோதி மூழ்கியது.
இந்த கப்பலில் பயணித்த 2,000த்திற்கு மேற்பட்ட பயணிகளில் 1500 பேர் இறந்துவிட்டாக கூறப்படுகிறது. இந்த உண்மை சம்பவத்தை தழுவு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் உலக அளவில் நல்ல வசூலை குவித்தது.
இந்நிலையில், அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்று அதே வடிவமைப்பில் டைட்டானிக் 2 உருவாக்கப்பட்டு வருகிறது. டைட்டானிக் பயணித்த அதே பாதையில் டைட்டானிக் 2 2022 ஆம் ஆண்டு தன் பயணத்தைத் துடங்க உள்ளது.
டைட்டானிக் 2-வை சீனாவின் ப்ளூ ஸ்டார் லைன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கப்பலை குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது பின்வருமாறு, டைட்டானிக் கப்பலில் இருந்த அதே தோற்றம், உள்ளரங்கு வடிவமைப்பு, அறைகள், ஓவியங்கள் அனைத்தும் அதே தோற்றத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், டைட்டானிக் கப்பலில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் இந்தக் கப்பலில் இருக்கும். டைட்டானிக் 2-வில் ஏறக்குறைய 2400 பயணிகள், 900 கப்பல் பணியாளர்கள் பயணிக்கலாம். இந்த கப்பல் கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவு ரூ.3,658 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.