அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி நடத்திவருகிறது.
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் வடகொரியா, அமெரிக்காவின் குவாம் தீவு மீது தாக்குதல் நடந்த போவதாக அறிவித்தது.
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், குவாம் தீவை தாக்குதலை கைவிடுவதாக வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
இதற்கு டிரம்ப், இது ஒரு நியாயமான முடிவு. இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். வடகொரியா அதிபர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார் என பாராட்டியுள்ளார்.