Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும் – அதிர்ச்சியை கிளப்பும் ட்ரம்ப்!

இன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும் – அதிர்ச்சியை கிளப்பும் ட்ரம்ப்!
, திங்கள், 30 மார்ச் 2020 (08:48 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு மக்கள்  கொத்துக்கொத்தாக இறந்து வரும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இது அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. ஆனால் அதிபர் ட்ரம்ப் நாட்டு மக்களின் நலனை விடவும் பொருளாதாரத்தின் மீதே அதிக அக்கறை கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவில்லை என சிலர் குற்றம் சாட்டும் நிலையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள ட்ரம்ப் ”அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் பலியை ஏற்படுத்த போகிறது. அதனால் சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்குதலிலிருந்து மீள ஜூன் 1ம் தேதி வரை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலை முடிவிட்டதால் பூசாரிகளுக்கும் நிதியுதவி தர வேண்டும் – எச்.ராஜா