Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எல்லைச் சுவரில் சமாதானம் என்பதே இல்லை – மீண்டும் முடங்கும் அமெரிக்க அரசாங்கம் ?

எல்லைச் சுவரில் சமாதானம் என்பதே இல்லை – மீண்டும் முடங்கும் அமெரிக்க அரசாங்கம் ?
, ஞாயிறு, 27 ஜனவரி 2019 (13:21 IST)
மெக்ஸிகொ எல்லை சுவர் விவகாரத்தால் 30 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த அமெரிக்க அரசுப்பணிகள் முடக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லையில் எல்லைச்சுவர் கட்டும் கோரிக்கையை முன்வைத்தார் ட்ரம்ப். இந்த திட்டத்திற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கவேண்டுமெனெவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் இதுவரை நிறைவேறவில்லை.

மேலும் அமெரிக்க அரசு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளுக்கான துறைகள் தவிர பெரும்பாலான துறைகள் டிசம்பர் 20 முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே அரசுப்பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை முடிவெடுத்து அதில் அதிபர் ட்ரம்ப்பை கையெழுத்திட வைத்துள்ளனர். இதனால் அமெரிக்க வரலாற்றில் நீண்ட நாட்களாக இருந்த அரசுப்பணி முடக்கம் தற்காலிகமாக மூன்று வாரங்களுக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 
webdunia

மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரம் குறித்து தனது டிவிட்டரில் கூறியுள்ள ட்ரம்ப் ‘மக்கள் எல்லோரும் எல்லைச் சுவர் விவகாரத்தில் என் வார்த்தைகளை கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு சக்திவாய்ந்த சுவர் அல்லது எஃகு தடையை கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. எல்லைச் சுவருக்காக நான் கேட்டுள்ள 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கவில்லையெனில் மீண்டும் பிப்ரவரி 15லிருந்து அரசாங்கம் முடங்கும் மீண்டும் அரசாங்கம் நடைபெறுவதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்தத்துடன்தான் இதற்கு சம்மதிக்கிறேன்.. எல்லைச் சுவர் எழுப்புவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை.’ எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனால் மீண்டும் அமெரிக்காவில் அரசு முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ மீது செருப்பு வீச்சு: பெரும் பரபரப்பு