துருக்கி நிலநடுக்கம்.. பிரபல கால்பந்து வீரர் காணவில்லை என தகவல்..!
பிரபல கால்பந்து வீரர் துருக்கி சென்றிருந்த நிலையில் அவர் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் அவர் இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும் சுமார் 5000 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல கால்பந்து கிளப் பணிகளான செல்சியா எப்சி மற்றும் நியூ கேடிஸ் எப்சி அணிகளின் முன்னாள் வீரர் கானா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு என்பவர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் இன்றி கிளப் அணியின் இயக்குனர் டானார் சவுத் என்பவரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த இருவரையும் தேடும் பணியில் மீட்பு படையினர் இருப்பதாகவும் இருவரும் ஒருவேளை இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கானா ஜனாதிபதி கூறுகையில், துருக்கி மக்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நாட்டின் குடிமகன் கிறிஸ்டியன் அட்சு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆண்டவரை பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.