நீங்களும் ஒரு நாள் கொல்லப்படுவீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாலஸ்தீனம் நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் கொல்லப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட இஸ்ரேல் விமானப்படை வீடியோவை பகிர்ந்து துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த கண்டனத்தில் ஒரு நாள் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என 'நெதன்யாகுவுக்கு' துருக்கி அமைச்சர் நசீப் இல்மாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.