அனுமதி இன்றி இனிமேல் டுவிட்டர் தளத்தில் பிறருடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடக்கூடாது என புதிதாக சி.இ.ஓஅக பதவி ஏற்ற பாரக் அக்ரவால் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முதல் டுவிட்டர் இணையதளத்தில் புதிய சிஇஓவாக இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ரவால் என்பவர் பதவி ஏற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பதவியேற்ற முதல் நாளே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இதன்படி தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களுடைய அனுமதி இன்றி பதிவு செய்யக் கூடாது என்றும் அவ்வாறு பதிவு செய்யும் டுவிட்டர் கணக்குகளை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்
ஏற்கனவே இந்த நிபந்தனையை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது சிஇஓஆக பதவி ஏற்றவுடன் முதல் அதிரடி நடவடிக்கையாக இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது