ட்விட்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ட்வீட் போட முடியாததால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. ட்விட்டரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ட்வீட்கள் வரை பதிவிட முடியும். இந்நிலையில் நேற்று முதலாக ட்விட்டரில் பதிவிட முடியாதபடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் உலக அளவில் ட்விட்டர் முடங்கியது.
செல்போன், கணினி மூலம் ட்விட்டரில் பதிவிட்டால் பதிவு வரம்பை மீறிவிட்டதாகவும், ட்வீட்டை அனுப்ப முடியவில்லை என்றும் வருகிறது. இதனால் பதிவிட முடியாமல் பயனாளர்கள் திணறி வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாக ட்விட்டர் தெரிவித்துள்ள நிலையில் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.