விண்வெளியில் பல நாடுகளும் ஆராய்ச்சியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள நிலையில் வரலாற்றி முதன்முறையாக அரபு பெண் ஒருவர் விண்வெளி செல்ல உள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து பல பெண் விஞ்ஞானிகளும் தோன்றி விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால் வளமான நாடான அரபு அமீரகத்தில் இருந்து இதுவரை ஒரு பெண் விண்வெளி வீராங்கனை கூட வந்தது இல்லை.
இந்நிலையில் வரலாற்றில் முதன்முறையாக அரபு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெண் ஈடுபட உள்ளார். 27 வயதான நோரா அல் மெட்ரூசி என்ற பெண் விண்வெளி வீராங்கனையாக பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரபு விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது.