துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷிய பிரதி நிதியை, உக்ரைன் எம்பி அலெக்சாண்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷிய நாடு, உக்ரைன் மீது போரிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பிய நிலையில், இதற்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டின் உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷியா பிரதி நிதியை தாக்கினார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.